உலகெல்லாம் பரந்து வாழ்கின்ற இந்து சம யத்தவர்கள் அனுஷ்டிக்கி ன்ற விரதங்களுள் கேதார கெளரி விரதம் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. சித்திகள் பலவற்றைத் தருகின்ற சக்திமிக்க கேதார கெளரி விரதத்தை இஸ்டகாமிய சித்திகளைப் பெறுவதற்காக ஆண்களும் பெண் களும் அனுஷ்டிக்கின்றனர்.
பொதுவாக இவ்விரதம் 21 நாட்கள் அனுஷ் டிக்கப்படுகிறது. புரட்டாதி மாதம் வளர்பிறை நவமி அல்லது அதற்கு முந்திய, பிந்திய திதிகளில் அவி ட்டம்/தசமி) ஆரம்பித்து ஐப்பசி மாதம் தீபாவளியை அண்மிய அபரபக்க அமாவாசைத் திதியில் முடிவுறும் வகையில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வருடம் அக்டோபர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நவம்பர் மாதம் 05ம் திகதி வெள் ளிக்கிழமை முடிவுறுவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பிட்டுள்ளது. கேதார கெளரி விரதம் பற்றிய சுவாரசியமான புராணக்கதை ஒன்றுள்ளது. முன்னொரு காலத்தில் திருக்கைலாயத்திலே பார்வதி சமேதரராக பரமேஸ்வரன் வீற்றிருந்தார். வேழமுகனும் வேல் முருகனும் அருகிருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் கூடியிருந்தனர். நாரதர் இசை மீட்ட நந்தி மத்தளம் கொட்ட ஊர்வசி, மேனகை, திலோத் தமை ஆகியோரின் நடனம் நடைபெற்றது.
அங்கிருந்தோர் சிவனையும் உமையையும் சுற்றிவந்து வணங்கினர். அவ்வேளையில் அங்கு வந்த பிருங்கி முனிவர் ஆனந்தமயமான விகடக் கூத்தொன்றை ஆடி அனைவரையும் மகிழ் வித்த பின்னர் பார்வதிதேவியை விலக்கிவிட்டு, பரமேஸ்வரனை மட்டும் சுற்றி வந்து வணங்கினார். இதனைக் கண்ட உமாதேவி அவமானமும் ஆத்திரமும் அடைந்தார். சக்தி கொடுப்பவள் நான், சக்தியாக இருப்பவள் நான். முக்தி கொடுப்பவள் நான்; முறையோ எனை விலக்கல்; தாயி ன்றிப் பிறந்தவரோ தவமுனிவர் பிருங்கி ரிஷி; தாயாக எனை நினைத்தால் தப்பேதும் வந்திடுமோ? பெண்ணை இழிவு செய்தல் பெரியோர்க்கு அழகாமோ? என்று உமாதேவி கேட்டார். முக்தி விரும் புகிறேன்; முதல்வனையே நான் தொழுவேன் என்றார் பிருங்கி ரிஷி.
சக்தி எனக்கு சத்தியமாய் தேவையில்லை என்று இவ்விடத்தில் சொல்லாமல் உம்மை ஏகவிடேன் என்றார் உமாதேவி. சக்தி எனக்கு சத்தியமாய் தேவையில்லை என்று பிருங்கி ரிஷி கூறியதும், அவரது உடலிலிருந்த சக்தி முழுவதையும் உமை பெற்றுக்கொள்ள, சபை நடுவே பிருங்கி ரிஷி சோர்வுற்று விழும்போது, சிவபெருமான் ஊன்றி நடவுமென ஒரு தடியை முனிவரின் கையில் கொடுத்தார். அவை நடுவே என்னை அவமதித்தீர், என்னவிதமே னும் இது தடுப்பேன் என்று சிவபிரானோடு கோபித்துக்கொண்டு உமாதேவி புறப்பட்டார். காடும் மலையும் கனைகடலும் காட்டாறும் நாடும் கடந்து நடந்து களைப்புற்று உமாதேவி ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். பன்னி ரெண்டாண்டு பருவமழை இல்லாமல் வறண்டு போயிருந்த வனம் உமையவளின் வரவால் திடீரென புதுப் பொலிவு பெற்றது. அவ்வ னத்தில் வசித்த கெளதம முனிவர் காரணத்தைக் கண்டறிய முற்பட்டு உமாதேவியைக் கண்டு தனது ஆசிர மத்திற்கு அழைத்து வந்து, நடந்த சங்கதிகளை அறிந்துகொண்டார்.
அன்பே சிவமானவரை அன்பால் அடைவதன்றி ஆத்திரத்தால் அடையவொண்ணாது என்று கூறி கேதாரேஸ்வரர் விரத மகிமையும் அனுஷ்டிக்கும் முறையும் கூறினார். உமாதேவி அவ்வாறே விரதம் அனுஷ்டிக்க சிவபெருமான் பிரசன்னமாகி என்னவரம் பெறுவதற்காய் இவ்விரதம் நோற்கின்றாய் என்று கேட்டார்.
Opening Hours
Morning 8am - 2pm
Evening 5pm - 9.30 pm
Pooja time :
Morning 9.00 a.m
After Noon 12.00 pm
Evening 5.00 pm
Evening 8.00 pm
On special days pooja time will be changed.
1808 Drew Road,
Mississauga,
Ontario L5S 1J6
Canada
Telephone:
905-612-1856